நியூயார்க்கில் நேர்க்குநேர் மோதிக்கொண்ட பஸ்கள் ;80 பேர் காயம்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இரட்டை மாடி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். மன்ஹாட்டன் பகுதி அருகே இந்த பஸ் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பஸ் மீது வேகமாக மோதியது.
இதனால் பஸ்சில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். மேலும் இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதியதில் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கி விழுந்தது.
இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காயம் அடைந்த 80 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் படுகாயம் அடைந்த 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
(Visited 13 times, 1 visits today)