தன் பதவியை இராஜினாமா செய்த நெதர்லாந்து பிரதமர்

நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ருடி தனது பதவிவை இராஜினாமா செய்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கூட்டணி அரசில் மார்க் ருடி பிரதமராக செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா நெதர்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வந்தது.
இந்நிலையில், மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் நெதர்லாந்து பிரதமர் பதவியை மார்க் இன்று இராஜினாமா செய்தார்.
அதேவேளை பிரதமர் பதவியை மார்க் இராஜினாமா செய்த நிலையில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 11 times, 1 visits today)