ஐரோப்பா

அதிநவீன வசதிகளுடன் புட்டினுக்கு தயாராகும் சிறப்பு ரயில்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்காக சிறப்பு ரயில் ஒன்று தயாராகி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆயுதம் தாங்கிய வீரர்களின் பாதுகாப்போடு இந்த ரயில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் உடற்பயிற்சிக் கூடம், நீராவிக் குளியல், திரைப்பட அரங்கு, டிவிடி பிளேயர்கள், சுகாதார கூடம், உள்ளிட்ட ஏராளமான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 60 மில்லியன் பவுண்ட் செலவில் இந்த நவீன ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

புட்டினுக்காக தயாராகி வருகிறது.விமானங்கள் செல்லும் பாதையை ராடார்கள் மூலமாக கண்டுபிடிப்பதைப் போல இந்த ரயில் செல்லும் பாதையை கண்டுபிடித்துவிட முடியாது.

ரயிலுக்கு எந்தவிதமான பெயரோ எண்ணோ கிடையாது என்றும், அந்த ரயில் வருவதையும் போவதையும் யாரும் கண்டுபிடித்து விட முடியாது என்றும் கூறப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்