ஈரானில் 5 நாட்களில் 800க்கும் அதிகமானோர் பாதிப்பு!
ஈரானில் வீசும் மோசமான மணல் புயல் காரணமாக கடந்த 5 நாட்களில் 800க்கும் அதிகமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தென்கிழக்கில் Sistan, Baluchestan ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 100க்கும் அதிகமானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மணல் புயலால் இதயத்திலும் கண்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
மணல் புயலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள குடியிருப்பாளர்களுக்கு 6,000க்கும் அதிகமான முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும்நாள்களில் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மணல் புயல் இன்னும் மோசமடையலாம்.
ஈரானில் வருடந்தோறும் மே மாத இறுதியிலிருந்து செப்டம்பர் மாதக் கடைசி வரை மோசமான மணல் புயல் வீசுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.