கனடாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வீடுகளை விட்டு வெளியேறியுள்ள லட்ச கணக்கான மக்கள்
கனடாவில் காட்டுத் தீ சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் 670க்கும் அதிகமான காட்டுத் தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
எப்படியிருப்பினும் அவற்றில் 380க்கும் மேற்பட்ட சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தீவிரக் காட்டுத் தீக்கான பருவம் முடிய இன்னும் குறைந்தது 3 மாதங்கள் இருப்பதாகக் கனடிய இயற்கை வள அமைச்சகத்தைச் சேர்ந்த Michael Norton கூறுகிறார்.
கனடாவின் மேற்கிலுள்ள பகுதிகளில் வரவிருக்கும் வாரங்களில் ஏற்கெனவே கணிக்கப்பட்டதைக் காட்டிலும் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
9 மில்லியன் ஹெக்டர் காடுகள் ஏற்கெனவே தீயில் அழிந்துவிட்டன. அது கடந்த 10 ஆண்டுகளின் சராசரியைவிட 11 மடங்கு அதிகமாகும்.
மே மாதத் தொடக்கத்திலிருந்து சுமார் 155,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.