பிரித்தானியாவில் மூழ்கும் மணலில் மாட்டிக்கொண்ட தம்பதி – அதிரடியாக காப்பாற்றிய வீரர்கள்
																																		பிரித்தானியாவில் Merseysideஇல் உள்ள குரொஸ்பி கடற்கரையில் மூழ்கும் மணலில் மாட்டிக்கொண்ட தம்பதியை சவுத்பொர்ட் (Southport) காற்பந்துக் குழு வீரர்கள், காப்பாற்றியுள்ளனர்.
தம்பதிக்கு உதவ காற்பந்து வீரர்கள் உடனடியாகச் சென்றனர் என்று காற்பந்துக் குழுவின் சமூக ஊடகத் தலைவர் தெரிவித்துள்ளா்.
இருவரும் காயங்கள் இன்றி மீட்கப்பட்டதாக மெர்சிசைட் தீயணைப்பு மீட்புக் குழு தெரிவித்தது.
பெண்ணை விரைவில் மீட்க முடிந்தது. அந்த ஆண் இடுப்பு வரையில் மாட்டிக்கொண்டிருந்ததால் அவரை மீட்கச் சுமார் 5 நிமிடம் ஆனது என தெரியவந்துள்ளது.
அவரை மீட்கச் சுமார் 4 காற்பந்து வீரர்கள் முயற்சி செய்தனர்.
(Visited 19 times, 1 visits today)
                                    
        



                        
                            
