லண்டன் பள்ளி கட்டிடத்தின் மீது கார் மோதியதில் சிறுமி உயிரிழப்பு
வியாழனன்று தென்மேற்கு லண்டனில் உள்ள ஆரம்பப் பள்ளி கட்டிடத்தில் கார் ஒன்று உழன்று சிறுமி கொல்லப்பட்டதுடன் பல குழந்தைகள் காயமடைந்தனர்.
விம்பிள்டனில் உள்ள தனியார் ஸ்டடி ப்ரெப் பெண்கள் பள்ளியில் நடந்த விபத்தை, காவல்துறை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் கருதவில்லை, மேலும் சம்பவ இடத்தில் 40 வயதுடைய பெண் ணருவர் கைது செய்யப்பட்டார்.
ஆபத்தான வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், லண்டன் பெருநகர காவல்துறை, குழந்தையின் மரணத்தை உறுதிப்படுத்தியது.
முன்னதாக, இந்த விபத்தில் ஏழு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ஹம்மண்ட் இந்த விபத்து “அசாதாரணமான துயரம் மற்றும் சோகமானது” என்று விவரித்தார்.
சுகாதார அமைச்சர் ஸ்டீவ் பார்க்லே இந்த சம்பவத்தை “வேதனைக்குரியது” என்று கூறினார்.
“எனது எண்ணங்கள் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் இருப்பதாக” என்று அவர் மேலும் கூறினார்.
லண்டன் மேயர் சாதிக் கான் இது “முற்றிலும் பேரழிவு” என்று கூறினார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.