இலங்கை

பயணிகளுடன் வைத்து பஸ்ஸை எரித்த உரிமையாளர்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று கடந்த ஜூன் 30ஆம் திகதி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமான நிகழ்வு, பேருந்திற்கான முப்பது மில்லியன் ரூபா காப்புறுதித் தொகையை பெற்றுக்கொள்ள அதன் உரிமையாளர் மேற்கொண்ட திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை.இருப்பினும் குறித்த பேருந்து முற்று முழுதாக எரிந்து விட்டது.

பொலிஸார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பேருந்துக்கான 30 மில்லியன் ரூபாய் காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பேருந்தின் உரிமையாளரே அதை எரித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!