வட்டி விகிதங்களை குறைக்கும் இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் 11 சதவீதமாகவும், வழக்கமான கடன் வசதி வீதத்தை 12 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மே மாதம் 31ஆம் திகதி அன்று, இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க முடிவு செய்திருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் வழமையான கடன் வசதி வீதம் முறையே நூற்றுக்கு 13.00 வீதம் மற்றும் 14.00 வீதமாக 250 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளன.
(Visited 25 times, 1 visits today)