பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் கார் விபத்துக்குள்ளானதில் அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் .
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தனது மகனுடன் உ.பி மாநிலம் பாண்டவ் நகரில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தபோது மீரட் என்ற இடத்தில் எதிரே வேகமாக வந்த டேங்கர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் பிரவீன் குமாரும், அவரது அவரது மகனும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கேன்டர் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)