விமானநிலையத்தில் உடமைகள் சோதனை; காப்பாற்றப்பட்ட 16 சிறுவர்கள்
அவுஸ்திரேலியா- சிட்னி விமானநிலையத்தில் பயணியொருவரின் உடமைகளை சோதனையிட்டதன் காரணமாக 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பிலிப்பைன்சில் 16 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்சின் வடக்குபகுதி நகரமொன்றில் வைத்து இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்சிலிருந்து நாடுதிரும்பிய குயின்லாந்தை சேர்ந்த நபரின் பயணப்பொதியை சிட்னி விமானநிலையத்தில் ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.
இதன்போது பயணியின் கையடக்கதொலைபேசியை சோதனையிட்டவேளை அதில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான படங்கள் வீடியோக்களையும் அவரது நோக்கத்தை வெளிப்படுத்தும் தகவல்களையும் ஆராய்ந்துள்ளனர்.
இந்த தகவல் அவுஸ்திரேலிய அதிகாரிகளிற்கு தெரியப்படுத்த அவர்கள் பிலிப்பைன்ஸ் பொலிஸாருக்கு அதனை தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அவுஸ்திரேலிய பொலிஸார், சந்தேகத்துக்குரிய 55 வயது பயணியை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ளனர்