பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை வரும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கலாச்சார தலைநகரான லாகூரில் கடந்த ஒன்பது மணிநேரத்தில் 272 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சாலைகள் வெள்ளநீர் தேங்கியிருப்பதாகவும். அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லாகூர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற வெள்ளத்தை சந்தித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த கோடையில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளம் பாகிஸ்தானில் 30 பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தியது.
(Visited 8 times, 1 visits today)