முத்துராஜா இலங்கைக்கு மீண்டும் கொண்டுவரப்படாது!
முத்துராஜா இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்படாது என தாய்லாந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘முத்துராஜா’ (சக் சூரின்) இப்போது எச்.எம். மன்னரின் ஆதரவில் இருப்பதால் அது மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவது சந்தேகமே என்று தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா தெரிவித்தார்.
முத்துராஜா தற்போது லம்பாங் மாகாணத்தின் ஹாங் சாட் மாவட்டத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் 30 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.





