ஐரோப்பா

ஐரோப்பாவில் அறிமுகமாகும் டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டை!

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டை அறிமுகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பல செயற்பாடுகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றாட செயற்பாடுகளை இலகு படுத்துவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் ஏற்க வகையில் நவீனமாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றமானது டிஜிடல் முறையான தமது அடையாள அட்டை ஒன்றை வைத்து இருக்க கூடிய புதிய சட்டம் ஒன்றை ஐரோப்பிய பிரஜைகளுக்காக உயர் பாராளுமன்றத்தில் இயற்றி இருக்கின்றது.

அதாவது ஏற்கனவே இது சம்பந்தமான சட்ட நகல்கள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய சட்டமானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையானது 2030 இல் நடைமுறைக்கு வரும் என்றும் இந்த நடைமுறை மூலம் 80 சதவீதமான மக்கள் தமது அடையாள அட்டைகளை டிஜிடல் முறை மூலம் நிருபிக்க கூடிய சூழ்நிலை உள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.

ஏற்கனவே டிஜிடல் முறையில் தமது வங்கி கடன் அட்டைகளை பாவிக்க கூடிய சூழ்நிலை இருந்தும் ஏன் இவ்வாறு டிஜிடல் முறையில் தங்களது அடையாள அட்டைகளை காண்பிக்க முடியாது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பாராளுமன்றமானது இந்த புதிய சட்டத்தை இயற்றி இருக்கின்றது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!