மாஸ்கோவை குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதல்
தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ்கோவை தாக்கிய அனைத்து ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏற்படவில்லை.
இதன் காரணமாக மாஸ்கோவில் உள்ள Vnukovo சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.





