வவுனியா நகரசபையில் இன்று புதிய செயலாளர் நியமனம்.

வவுனியா நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய இ.தயாபரன் வேறு திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து தற்காலிக செயலாளர் மூலம் இயங்கி வந்தது. வெற்றிடமாக காணப்பட்ட இப் பதவிக்கு புதிதாக செயலாளர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய செயலாளராக கடந்த நான்கு வருடங்களாக செட்டிகுளம் பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றி வந்த பூ.செந்தில்நாதன் வவுனியா நகரசபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் (04) உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
(Visited 19 times, 1 visits today)