அலாஸ்காவில் 4.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
திங்களன்று ஏங்கரேஜின் வடகிழக்குப் பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் படி, நிலநடுக்கம் நகரத்திற்கு தெற்கே 12 மைல் தொலைவிலும், ஈகிள் ஆற்றின் தெற்கே இரண்டு மைல் தொலைவிலும் பதிவாகியுள்ளது.
லேசானது முதல் மிதமானது வரையிலான நிலநடுக்கத்தை 1000க்கும் மேற்பட்டோர் உணர்ந்தனர். எவ்வாறாயினும், காயங்கள் அல்லது சேதங்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இது உள்ளூர் நேரப்படி காலை 6:47 மணிக்கு நடந்துள்ளதாகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வழங்கிய தரவுகளின்படி, 17.5 மைல் ஆழத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கம் தொடர்பாக எந்த எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை மற்றும் ஏங்கரேஜ் தீயணைப்புத் துறை எந்த அவசர அழைப்புகளையும் தெரிவிக்கவில்லை.
ஒரு நாள் முன்னதாக, மேற்கு கடற்கரையில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
அமெரிக்காவில் நில அதிர்வு தாக்கம் உள்ள இடங்களில் அலாஸ்காவும் உள்ளது. நவம்பர் 2018 இல், ஏங்கரேஜில் 7 ரிக்டர் அளவில் தாக்கி உள்கட்டமைப்பை சேதப்படுத்தியது.
1964 ஆம் ஆண்டில், 9.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அமெரிக்காவில் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், உலகின் இரண்டாவது சக்திவாய்ந்ததாகவும் பதிவு செய்யப்பட்டது.
இது 100 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது, அதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது, இது கடற்கரையில் உள்ள பல சிறிய நகரங்களை அழித்தது.