நீர் தகன முறையை அறிமுகப்படுத்தும் பிரித்தானியா!
பிரித்தானியாவில் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய புதிய முறை ஒன்றை இறுதிச் சடங்கு சேவை வழங்குநரான Co-op Funeralcare, நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி நீர் தகனம் என அழைக்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இறுதிச் சடங்கு ‘தொழில்’ துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதுமையான அணுகுமுறை, ரீசோமேஷன் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதில் மனித எச்சங்களை உடைக்க தண்ணீர் மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கலவை பயன்படுத்தப்படுகிறது.
குறித்த திட்டம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது வழக்கமான அடக்கம் மற்றும் தகனங்களுக்கு நீர் தகனம் ஒரு நிலையான மாற்றாக இருக்கும் என நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நீர் தகனம் அல்லது மறுசீரமைப்பு என்பது இங்கிலாந்தில் ஒப்பீட்டளவில் புதியது என்றாலும், கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களில் இது ஏற்கனவே பிரபலமடைந்துள்ளது.