எண்ணெய் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய வர்த்தக தலையீடுகளால் அமெரிக்க டாலரின் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, ஆசியா முழுவதும் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (3) பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 75.21 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீத வீழ்ச்சியாகும்.
மேலும், WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.41 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
(Visited 16 times, 1 visits today)