ரணில் அரசாங்கத்திற்கு நாம் ஆதரவளித்து வருகிறோம்!! மகிந்த
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பற்றியோ, இன்னும் அறிவிக்கப்படாத ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பற்றியோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. ஒரு தரப்பினர் ரணிலுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் உள்ளனர்.
கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இது தொடர்பில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என மகிந்த ராஜபக்சவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் பொதுஜன பெரமுன ஆதரவளித்து வருகிறது.
எனவே, அவரைப் பற்றியோ, அரசைப் பற்றியோ எந்த கருத்தையும் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.