கடன் மறுசீரமைப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். அந்த முடிவுகளை ஜனரஞ்சக முடிவுகளாக மாற்றுவது பொதுஜன பெரமுனவின் பொறுப்பு என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணையை நிராகரித்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டைக் கட்டியெழுப்ப எடுக்கப்படும் தீர்மானங்கள் ஜனரஞ்சகமானதாக இருக்க வேண்டும். கடனை மறுசீரமைப்பது சரி. அது நியாயமானதாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். அந்த முடிவுகளை ஜனரஞ்சக முடிவுகளாக மாற்றுவது பொதுஜன பெரமுனவின் பொறுப்பு எனவும் ஒரு நாடாக நாம் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலகட்டம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.