இலங்கை

வெளிநாட்டு விமான பணிப்பெண்களாக இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

கட்டார் விமான சேவை நிறுவனமானது விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

அத்துடன் இலங்கையர்களுக்கும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த கட்டார் விமான சேவை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்க முடியுமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டார் விமான சேவையில் இணைந்து கொள்வதற்கு ஆகக் குறைந்த வயது எல்லை 21ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவராகவும், அம்மொழியில் சிறப்பாக உரையாடக் கூடியவராகவும் விண்ணப்பதாரர் இருப்பது அவசியம்.

உயர் கல்வியைக் கற்றவர்கள், ஆரோக்கியமானவர்கள், சிறந்த திறமைகளைக் கொண்டவர்கள், பன்னாட்டுக் குழுக்களுடன் பணியாற்றக் கூடியவர்கள் இந்த பதவிக்கு தகுதியுடையவர்களாக கணிக்கப்படுவர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!