பிரான்ஸில் கடுமையாகும் சட்டம் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு
பிரான்ஸில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்படுபவர்கள் தங்களுக்கான குற்றப்பணத்தை உடனடியாக செலுத்த நேரிடும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.
“போதைப்பொருள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கும் வரை நாம் அதன் விற்பனையாளர்கள் தொடர்பாக நாம் வருத்தப்பட முடியாது” என ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்தோடு போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கான சில இறுக்கமான சட்டங்களையும் அறிவித்தார்.
இந்த கோடைகாலத்தின் நிறைவில் இருந்து, போதைப்பொருள் பாவனையாளர்கள் தங்களுக்கான குற்றப்பணத்தை தாமதமின்றி உடனடியாக செலுத்த நேரிடும் எனவும், பணமாகவோ அல்லது வங்கி அட்டைகளூடாகவோ இந்த தொகையை செலுத்த நேரிடும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து நிறுத்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்படுவது தொடர்பிலும் ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார்.