அமெரிக்க பல்லைக்கழக மாணவர்கள் சேர்க்கை தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அமெரிக்காவில் பல்லைக்கழக மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது இனத்தை குறிப்பிடும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது. இந்நிலையில்,அதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடைவித்துள்ளது.
1960ல் இருந்து இந்த நடைமுறை அமலில் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
மாணவர்கள் அவர்களுடைய அனுபவங்கள் மற்றும் திறமைகள் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்றும், இனத்தின் அடிப்படையில் அல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
அதேவேளை மொத்தம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 நீதிபதில் தடைக்கு ஆதரவு அளித்த நிலையில் 3 நீதிபதில் தடைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)





