மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியை 14 நாட்களுக்குள் செலுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள தாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனங்களிடமிருந்து வரி மற்றும் தாமதக் கட்டணமாக 616 கோடி ரூபாவை அரசாங்கம் வசூலிக்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
10 மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வரிப்பணம் அறவிடப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேற்று (27) அழைப்பு விடுக்கப்பட்டு 14 நாட்களுக்குள் அனைத்துப் பணத்தையும் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த காலப்பகுதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.