உணவு ஊட்டும் போது தாய்க்கு சுகயீனம்; குழந்தை மரணம்

குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த போது 26 வயதான தாய்க்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, தொண்டையில் உணவு சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பொகவந்தலாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகன் அகல்யா என்ற ஒரு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உணவூட்டிக் கொண்டிருந்த போது தாய்க்கு வலிப்பு ஏற்பட்டதுடன் குழந்தைக்கு தொண்டையில் உண்ட உணவு சிக்கியுள்ளது. அதையடுத்து தாயும் குழந்தையும் கட்டிப்பிடித்த படி தரையில் கிடந்ததை கண்ட அயலவர்கள் விரைந்து இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இருந்தபோதும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)