கனடாவில் குடியிருப்பு ஒன்றிற்கு தீ வைத்த இரு பெண்கள்

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் குடியிருப்பு ஒன்றிற்கு தீ மூட்டிய இரண்டு பெண்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
ஸ்காப்ரோவின் Clairlea-Birchmount பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண்கள் இருவரும் லிப்டில் தீ மூட்டுவதற்கான எரிபொருட்களை எடுத்துச் செல்லும் காட்சி cctv காணொளியில் பதிவாகி உள்ளது.குடியிருப்பின் வீடு ஒன்றின் கதவு பகுதியை இந்த பெண்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இந்த தீமூட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
34 வயதான ஆண்ட்ரியா ஜாமீர் மற்றும் 23 வயதான டுஸ்டினா பிரெஸ் ஆகிய இருவருமே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்கள் தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் கிடைக்க பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)