யாழில் வின்சன் புளோறன்ஸ் ஜோசபின் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்
ஊடகவியலாளர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் இடம்பெற்றது.
இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பன்முக தளத்தில் இயங்கியவர் ஜோசப் ஐயா என அழைக்கப்படும் வின்சன் புளோறன்ஸ் ஜோசப் ஆவார்.
அவரின் நினைவேந்தல் நிகழ்வில் அவரது பாரியார் ஜோசப் ஐயாவின் உருவ படத்திற்கு மலர் அணிவித்தார். ஊடகவியலாளர் க. ஹம்சனன் பொது சுடர் ஏற்றினார், தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மலர் தூவி அஞ்சலித்தனர்.
(Visited 11 times, 1 visits today)





