அமெரிக்காவை அழிக்க சபதம் செய்யும் வடகொரியா!
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை தண்டிக்க வலிமையான, முழுமையான ஆயுதம் வடகொரியாவின் வசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதம் ஏந்திய வடகொரியா, அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உட்பட பல்வேறு ஆயுதங்களை சோதனை செய்து, அமெரிக்காவுடன், பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
கொரியப் போர் நடைபெற்று 73 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பியோங்யாங்கில் பேரணி ஒன்று நடைபெற்றது.
இந்த பேரணியில் சுமார் 120,000 உழைக்கும் மக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் அமெரிக்காவை அழிக்க சபதம் செய்யும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.
அரச ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், ‘அமெரிக்காவின் நிலப்பரப்பு முழுவதும் எங்கள் துப்பாக்கிச் சூடு எல்லைக்குள் உள்ளது’ மற்றும் ‘ஏகாதிபத்திய அமெரிக்கா அமைதியை அழிப்பவர்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
வடகொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை விரைவில் ஏவும் என்ற கவலைகளுக்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.