சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சிங்கப்பூரில் வேலையிடங்களில் அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள் ஊழியர்களின் உயிரை பறிப்பதோடு, அவர்களின் குடும்பங்களையும் நிலைகுலைய செய்கின்றதனை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்துகளுக்கு முக்கிய காரணமாக பாதுகாப்பற்ற வேலையிடங்கள் உள்ளதாக நிபுணர்களால் கூறுகின்றனர்.
பாதுகாப்பற்ற சூழலை கொண்ட வேலையிடங்கள் குறித்து தெரிந்தும் அதனை கூறினால் தொழிலை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் ஊழியர்கள் பலர் உள்ளனர்.
அதற்கமைய, இனி தைரியமாக முறைப்பாடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்பை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கிறது.
SnapSAFEஐப் பயன்படுத்தி மனிதவள அமைச்சகத்திடம் நேரடியாக புகாரளிக்கலாம். இது மிக விரைவான மற்றும் எளிதான முறை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற சூழலை கொண்ட வேலையிடங்கள் குறித்த விவரங்களை கொடுத்தால் மட்டும் போதும். உங்கள் அடையாளம் மற்றும் தகவல் ரகசியமாக வைக்கப்படும் என்பதை MOM உறுதிப்படுத்தியுள்ளது.
“வேலையிடங்களை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று MOM கூறியுள்ளது.