இந்தியா

கிணற்றில் 3 பிள்ளைகளுடன் சடலமாக கிடந்த பெண்!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோகன்லால். இவர் மும்பையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா தனது 3 பிள்ளைகளுடன் பிரதாப்கரில் வாழ்ந்து வந்துள்ளார்.இந்நிலையில், நகர்பூர் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் பெண்ணொருவர் மூன்று பிள்ளைகளுடன் பிணமாக மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டனர். பின்னர் அது பிரமிளா மற்றும் அவரது பிள்ளைகள் என்பது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில், மூன்று நாட்களுக்கு முன்பு தாயின் வீட்டிற்கு சென்று பிரமிளா பிள்ளைகளுடன் தங்கியுள்ளார்.

கிணற்றில் 3 பிள்ளைகளுடன் சடலமாக கிடந்த பெண்! விசாரணையில் தெரிய வந்த விடயம் | Mother Committed Suicide With 3 Children Up

முன்னதாக, அவர் கணவரிடம் தன்னையும், தனது பிள்ளைகளையும் உடன் அழைத்து செல்லுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் கணவர் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.இதன் பின்னர் தான் பிரமிளா தன் பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!