சர்வாதிகாரிக்கு தெரியாது : உளவு பலூன் விவகாரத்தில் சீன ஜனாதிபதியை விமர்சித்த பைடன்!
சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாறியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கை சந்தித்து பிரச்சினைகளை சுமூகமாக்குவது குறித்து கலந்துரையாடியிருந்தார்.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி பைடன், கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வில், சீனாவின் பலூனை நான் சுட்டு வீழ்த்தியபோது, ஷீ ஜின்பிங் ஏன் மிக கவலையடைந்தார் என்றால், பலூனில் உளவு உபகரணங்கள் இருந்தமை அவருக்குத் தெரியாது. அதுதான் எனக் குறிப்பிட்டார்.
சர்வாதிகாரிகளுக்கு அது பெரும் சங்கடமாகும். ஏனெனில் அங்கு என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியாது’ என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மிகப் பெரிய பொருளாதார நாடுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வரும் பிரச்சினைகள் பைடனின் இந்த சர்ச்சை கருத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.