சிங்கப்பூரில் கட்டுமான ஊழியரின் விளையாட்டால் நேர்ந்த விபரீதம்
சிங்கப்பூரில் குழந்தைகளை நோக்கி விளையாட்டுக்காக பட்டாசை வீசிய கட்டுமான துறையை சேர்ந்த ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அதனை கண்ட ஊழியர் விளையாட்டுக்காக அவர்களை நோக்கி பட்டாசுகளை வீசினார்.
உடனே அந்த பட்டாசு பலத்த சத்தத்துடன் வெடித்ததால் குழந்தைகள் பயத்தில் தெறித்து ஓடியுள்ளது. இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 49 வயதான ராம்தான் புஜான் என்ற அந்த ஊழியருக்கு 3,500 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவித்தது தொடர்பாக மற்றொரு குற்றச்சாட்டும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டது.
2022 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதியன்று ஜூரோங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக பிளாக்கில் இந்த சம்பவம் நடந்தது.
கட்டுமானத் துறையில் ஓட்டுநராக பணிபுரியும் அவரும் அதே வீட்டில் தான் வசிக்கிறார்.