அமெரிக்கா செல்லும் மோடி!!! நோட்டமிடும் சீனா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க அரசுப் பயணம் இன்று தொடங்குகிறது.
பிரதமர் மோடி வரும் 24ம் திகதி வரை அமெரிக்காவில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமரின் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம், அவரது தலைமையில் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியப் பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி விசேட இரவு விருந்தொன்றை தயார் செய்துள்ளதாகவும், அதேவேளை இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், வரும் 22ம் திகதி அமெரிக்க காங்கிரஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் உரையாற்ற உள்ளார், இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என சர்வதேச விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்தியப் பிரதமரின் அமெரிக்க விஜயத்தை சீனாவும் ரஷ்யாவும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.