எலான் மஸ்க்கை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்நிலையில், அமெரிக்க பயணத்தின்போது நியூயார்க்கில் பிரதமர் மோடி பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்திக்க உள்ளார். அதேபோல், நோபல் பரிசு பெற்ற பிரபலங்கள், பொருளாதார வல்லுனர்கள், கலைஞர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், மருத்துவத்துறை பிரபலங்கள் என பல்வேறு துறை பிரபலங்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
(Visited 11 times, 1 visits today)