உலகிலேயே மிக வேகமாக வெப்பமயமாகும் கண்டமாக மாறிய ஐரோப்பா! பரிதாப நிலையில் மக்கள்

உலகிலேயே மிக வேகமாக வெப்பமயமாகும் கண்டமாக ஐரோப்பா மாறி வருவதாக தெரியவந்துள்ளது.
உலக காலநிலை அமைப்பின் அறிக்கை இதனை தெரிவித்துள்ளது.
வெப்ப அலைகளுக்கு ஐரோப்பா தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடல் மேற்பரப்பு வெப்பநிலை அடையும் என்றும், வரலாறு காணாத பனிப்பாறை உருகுதல் மற்றும் வறட்சிக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980-களில் இருந்து, உலக சராசரியை விட ஐரோப்பா இரு மடங்கு வெப்பமடைந்து வருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் கடுமையான வறட்சி, அதிக தீவிரமான வெப்ப அலைகள் மற்றும் புயல்கள் ஆகியவற்றை இது ஏற்படுத்தியது.
(Visited 12 times, 1 visits today)