ஆஸ்திரேலியா வெற்றி பெற 281 ஓட்டங்கள் இலக்கு
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது.
7 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி இன்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ஒல்லி போப் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், பேர்ஸ்டோ 20 ரன்கள், மொயீன் அலி 19 ரன், ஒல்லி ராபின்சன் 27 ரன்கள், ஜேம்ஸ் ஆண்டர்சன் 12 ரன் என ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
இன்றைய நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இன்றய நாளை முடித்தது.
மேலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடைசி நாளான நாளை 174 ஓடங்ககளை எடுக்க வேண்டும் மற்றும் இங்கிலாந்து அணி 7 விக்கெட்களை மாத்திரமே பெறவேண்டும்.