பில்லியனர்கள் அதிகளவு வாழும் நாட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா?
உலகில் அதிக செல்வந்தர்களை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும் ஒன்று. இங்கு 50 மாநிலங்களில் 47 மாநிலங்களில் ஒருவராவது பில்லியனராக இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் தரவரிசையில் உள்ள பில்லியனர்களின் மொத்த சொத்து $1.5 டிரில்லியன் ஆகும். உலகில் உள்ள சில பணக்காரர்களின் தாயகமாக அமெரிக்கா உள்ளது.
ஃபோர்ப்ஸின் அறிக்கையின்படி, அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 47 மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு பில்லியனர் உள்ளனர். அலாஸ்கா, டெலாவேர் மற்றும் மேற்கு வர்ஜீனியா ஆகிய மாநிலங்கள் தான் பில்லியனர்கள் இல்லாத மாநிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தம் 775 பில்லியனர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர், இந்த எண்ணிக்கையில் 60% கலிபோர்னியா கொண்டுள்ளது. இங்கு 179 பில்லியனர்கள் இருக்கிறார்கள். இதற்கடுத்ததாக நிவ்யோர்கில் 130 பில்லியனர்களும், டெக்சாஸில் 73 பேரும், புளோரிடாவில் 92 பேரும் இருக்கிறார்கள்.
இந்த பில்லியனர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களின் தரவரிசையில், அலபாமா, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் வெர்மான்ட் ஆகியவை சமீபத்தில்தான் இடம்பிடித்தன.
இந்தப் பட்டியலில் 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க் உள்ளார். வாஷிங்டனின் மிகப் பெரிய பணக்காரர் ஜெஃப் பெசோஸ் இருக்கிறார்.
அமெரிக்க மாநிலங்களின் பணக்காரர்களின் சராசரி வயது 73 ஆண்டுகள். இந்தப் பட்டியலில், 36 வயதுடைய இல்லினாய்ஸைச் சேர்ந்த வால்மார்ட்டின் வாரிசு லூகாஸ் வால்டன், இளைய கோடீஸ்வரராக இருக்கிறார்.