ஐரோப்பா

இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள சிபிலிஸ் நோய்

ஒரு காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகளிடம் மட்டுமே காணப்பட்டதாக கருதப்படும் மோசமான நோய் ஒன்று இங்கிலாந்தில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இரண்டு உலகப்போர்களுக்குப் பின் அதிகரிக்கத் துவங்கிய நோய் சிபிலிஸ் என்னும் பாலுறவு மூலம் பரவும் நோய். பெனிசிலின் என்னும் விலைமதிப்பில்லாத ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், ஆணுறைகள் பயன்பாட்டைத் தொடர்ந்தும் குறையத் தொடங்கியது இந்நோய்.

தற்போது இங்கிலாந்தில் இந்த சிபிலிஸ் நோய் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டில், 15 சதவிகிதம் அதிகரித்து 8,700 பேருக்கு இந்நோய் தொற்றியுள்ளது தெரியவந்துள்ளது. 1948க்குப் பிறகு இந்த அளவுக்கு சிபிலிஸ் தொற்று பரவியுள்ளது இப்போதுதான்.

இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள மோசமான நோய் ஒன்று | New Virus England

இங்கிலாந்திலேயே அதிக அளவில் லண்டனில்தான் சிபிலிஸ் காணப்படுகிறது. 100,000 பேரில் 44.9 பேருக்கு இத்தொற்று உள்ளது. இந்த எண்ணிக்கை, வடகிழக்கில் வெறும் 14.8 ஆக இருக்கும் நிலையில், லண்டனில் அது மூன்று மடங்குக்கும் அதிகமாக காணப்படுகிறது.

ட்ரிப்போனிமா பல்லிடம் என்னும் ஒருவகை நோய்க்கிருமியே இந்த நோயை உருவாக்குகிறது.முன்பின் தெரியாதவர்களுடன் பாலுறவு, பாலுறவின்போது ஆணுறை அணியாதது போன்ற காரணங்களால் இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!