ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – ஜெர்மனியில் முக்கிய நடவடிக்கை
ஐரோப்பாவில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல் தொடர்பாக ஜெர்மனி நாட்டில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் ரஷ்யாவின் அச்சுறுத்தல் மற்றும் சீனாவி்னுடைய அண்மை கால நடவடிக்கைகள் காரணமாக ஜெர்மன் நாட்டில் 15.06.2023 ஜெர்மன் பாராளுமன்றத்தில் புதிய பாதுகாப்பு கொள்கை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
அதாவது இவ்வாறான நாடுகளிடம் இருந்து ஜெர்மனியை பாதுகாக்கும் விடயம் தொடர்பாக பல முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக எரி வளங்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியான பாதுகாப்பு மற்றும் இணைய வழி தாக்குதல்களை எவ்வாறு தடை செய்வது தொடர்பாக சில விடயங்கள் ஆராயப்படவுள்ளது.
இது தொடர்பாக புதிய கொள்கைகள் நிறைவேற்றப்பட்டதாக ஜெர்மனிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கமானது இவ்வாறான புதிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு மேலதிக நிதியத்தை முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஜெர்மன் பாராளுமன்றத்தில் ஜெர்மனியினுடைய அரச படைகளுடைய வளர்ச்சி மற்றும் நவீன மயமாக்களுக்காக 100 பில்லியன் யுரோக்கள் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் இப்பொழுது புதியதொரு பாதுகாப்பு கொள்கை பிரகடனம்படுத்தப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.