ஆசியா

சிங்கப்பூரில் ஆயிர கணக்கில் விற்பனையாகும் வீடுகள்!

சிங்கப்பூரில் 1000க்கும் அதிகமான தனியார் வீடுகள் விற்பனையாகியுள்ளன.

12 மாதங்களில் அதுவே அதிகமான விற்பனையாகும். ஜாலான் அனாக் புக்கிட்டில் இருக்கும் The Reserve Residences, Thiam Siew Avenueவில் உள்ள The Continuum ஆகியவற்றில் ஆக அதிகமான வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தனியார் வீட்டு விற்பனை ஐந்தாவது மாதமாகத் தொடர்ந்து உயர்ந்திருக்கிறது. மே மாதத்தில் 1,038 கூட்டுரிமை வீடுகள் விற்கப்பட்டன.

நகரச் சீரமைப்பு ஆணையம் அந்த விவரங்களை வெளியிட்டது. புக்கிட் தீமா வட்டாரத்தில் பல சிறந்த பள்ளிகள் இருப்பதும், கவர்ச்சிகரமான விலையும் அனாக் புக்கிட் வட்டாரத்தில் வீடுகள் வேகமாக விற்பனையானதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

பாயா லேபாரில் இருக்கும் Thiam Siew Avenue வட்டாரத்திலும் நல்ல பள்ளிகள் அருகே இருப்பது அதிக வீடுகள் விற்கப்பட்டதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!