சீமெந்து தூண் சரிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி உயிரிழப்பு

மாத்தறை, நெடோல்பிட்டிய, ரன்மாலு கிராமத்தில், பாதி கட்டப்பட்ட வீடொன்றில் இருந்து சீமெந்து தூண் சரிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
அவரது தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதி கட்டி முடிக்கப்பட்ட வீட்டின் மேல் தளத்தில் இரண்டு சீமெந்து தூண்களுக்கு இடையில் தொங்கிய கயிறு கட்டிலை தந்தையும் மகளும் தயார் செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தை ஏற்படுத்திய சிமென்ட் கம்பம், மேல் தளத்தின் கான்கிரீட் தளத்தில் சரியான கம்பியின்றி நான்கு ஆணிகள் மட்டும் பொருத்தப்பட்டதாகவும், இதனால் கம்பம் அறுந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
(Visited 18 times, 1 visits today)