ககோவ்கா வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போன 31 பேர் : தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
ககோவ்கா அணை உடைந்ததையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக கீய்வ் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜூன் 6 அன்று ககோவ்கா அணை உடைந்ததால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், விவசாய நிலங்களை அழித்து, பொதுமக்களுக்கான விநியோகம் துண்டிக்கப்பட்டது. பெருமளவானோர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
Kherson மற்றும் Mykolaiv பிராந்தியங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 3,600 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், 31 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)