இலங்கையில் நியமனக் கடிதங்கள் கிடைத்தும் சேவையில் இணையாத மருத்துவர்கள்!
இந்த வருடம் வைத்தியர்களாக நியமிக்கப்பட்ட 1300 பேரில் 100 பேர் பணியில் இணையவில்லை என தரவுகள் வெளியாகியுள்ளன.
நியமனம் பெற்ற சுமார் 50 வைத்தியர்கள் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்ள வரவில்லை எனவும் சுமார் ஐம்பது பேர் நியமனக் கடிதங்களை ஏற்று பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ சேவையில் இணைந்துகொள்ளும் வைத்தியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 54000 ரூபா எனவும் அதற்கமைய அவரின் நாளாந்த சம்பளம் 2000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊதியத்தை கொண்டு வைத்தியர்கள் அவர்களது கனவுகளை அடைய கஷ்டமாக உள்ளதால் பல வைத்தியர்கள் மருத்துவ துறையில் நிலைத்து நிற்பதில்லை எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.