சீனாவுக்கு காத்திருக்கும் ஆபத்து – புதிய கொரோனா அலை தாக்கும் அபாயம்
சீனாவை அதிக பாதிப்புடைய புதிய வகை கொரோனா அலை தாக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோய் தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் மூலம் கொரோனா தொற்றை உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் சீனாவில் இன்னும் கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் அதிக பாதிப்புடைய புதிய வகை கொரோனா அலை சீனாவை தாக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் இந்த புதிய கொரோனா 5 மடங்கு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வகை தொற்றால் வாரத்திற்கு சுமார் 6.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது சீனாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.