டிக் டாக்கில் மூழ்கிக்கிடக்கும் 2K கிட்ஸ்! ஆய்வில் தகவல்
உலகம் முழுவதும் பதிவாகும் நிகழ்வுகளில் இளம் சமூகம் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றும், செய்திகளைப் பற்றி அறிய அவர்கள் டிக் டாக்கைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
உலகளவில் 94,000 பேரிடம் ரொய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அவர்களிடையே தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது என்று அறிக்கை கூறுகிறது.
டிக் டாக் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடக வலையமைப்பு ஆகும்.
ரொய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இளைஞர்கள் சமூகம் டிக் டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற புதிய ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகள் மற்றும் தொடர்புடைய தகவல்களைப் பெற மிகவும் விரும்புகிறது.
பத்திரிக்கையாளர்களின் செய்திகளை விட, பிரபலங்களின் தகவல்களை நம்புவதற்கு அவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளனர் என்பது இது தொடர்பான சர்வேயில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த இளைஞர் சமூகத்தினரிடையே இந்நிலைமை காணப்படுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.