பாதாள உலக பிரமுகர் “பூரு மூனா” விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
இவ்வருட முற்பகுதியில் விமான நிலையத்தில் வைத்து படுமோசமான சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட பிரபல குற்றப் பிரமுகர் ரவிந்து சங்க டி சில்வா என்ற “பூரு மூனா” ஜூன் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
2022 டிசம்பர் 18 அன்று ஹன்வெல்லவில் உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட “போரு மூனா”, மேலும் பல கொலைகளில் துப்பாக்கிதாரியாக இருந்ததாக நம்பப்படுகிறது.
பெப்ரவரி 24 அன்று, நீதிமன்றத்தால் முன்னர் வழங்கப்பட்ட பயணத் தடையின் காரணமாக துபாய்க்கு விமானத்தில் ஏற தடை விதிக்கப்பட்டதை அடுத்து, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பொலிஸாரின் காவலில் இருந்து தப்பிச் சென்றார் “போரு மூனா”.
“போரு மூனா” போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார். கைது செய்யப்பட்ட போது, குறித்த உணவக உரிமையாளரின் கொலையின் பின்னர், பண்டாரகம, மில்லனிய, மல்வத்தை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தஞ்சம் புகுந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, மேல்மாகாண தெற்கு பொலிஸ் பிரிவினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட அவிசாவளை மேல் நீதிமன்றம், மார்ச் 15 அன்று, “போறு மூனா”வின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மீண்டும் தடை விதித்தது.