யாழில் முச்சக்கர வண்டி கவிழந்து விபத்து : 11 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று கவிழந்து விபத்துக்குள்ளாகியதில் முன்பள்ளி சிறுவர்கள் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் சிக்கிய முன்பள்ளி சிறுவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்பள்ளி சிறுவர்களை அதிகளவில் ஏற்றியமையால் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)