அவுஸ்திரேலியாவில் பத்து பேரின் உயிரை பறித்த சாரதிக்கு பிணை
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மற்றும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறந்தார்.
விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 12 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர், 14 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும், பேருந்தின் சாரதியான 58 வயதான நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டி பத்து பேரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த பயங்கர விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், விபத்தை எதிர்கொண்டவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் மாநில மக்கள் அனைவரும் இந்த விபத்தால் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர் என்பது தெளிவாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவருக்கு பிணை வழங்க நீதிபதி தீர்மானித்ததுடன், நீதிபதியின் தீர்மானத்திற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், 58 வயதான குறித்த சாரதி மிகவும் சோகமான முகத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.