சீனாவின் சர்ச்சைக்கு அமெரிக்கா மீண்டும் பதிலடி

கியூபாவில் உளவுத் தளத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியான சர்ச்சைக்கு அமெரிக்கா மீண்டும் பதிலடி கொடுத்துள்ளது.
அதன்படி, கியூபாவில் பல ஆண்டுகளாக சீன உளவுத் தளம் இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சீனாவுக்கு இது புதிதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கியூபாவில் உளவுத் தளம் அமைப்பதற்கு சீனாவுக்கும் கியூபாவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை பென்டகன் நிராகரித்துள்ள பின்னணியிலேயே ஜோன் கிர்பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)